புதன், அக்டோபர் 29, 2025

சின்னஞ்சிறு

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை


இன்று 
இயல்பான இனிதான பாடல் ஒன்று

சின்னஞ்சிறு பெண் போலே 
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே  
ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் 
(சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி 
அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் 
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு 
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக 
நர்த்தனம் ஆடிடுவாள்.. 
(சின்னஞ்சிறு)
 -::-

பாடல்
சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றியவர
 உளுந்தூர்பேட்டை சண்முகம்

இசை: T.R. பாப்பா 


 நன்றி இணையம்
-:-

ஓம் சக்தி ஓம்
**

6 கருத்துகள்:

  1. அருமையான பாடல்.  அந்த நேரத்தில் சட்சட்டென சில பாடல்கள் சீர்காழியாரைப் பாடவைத்து வெளியாயின.  எல்லாப் பாடல்களுமே கேட்டு ரசிக்கத்தக்கவை.  மனதில் என்றும் நிறைந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீர்காழி, டி எம் எஸ் சூலமங்கலம் ஆகியோர்களின் குரல் பக்தி உணர்வின் ஊற்று..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. பாடல் பகிர்வூக்கு நன்றி.

    இந்தப் பாடல் படிக்கும் காலத்தில் தேவார வகுப்பில் பாடுவோம் அனைவருக்கும் பிடித்தமான பாடலாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அம்பிகையின் செயல்.,

      தங்கள் வருகையும்
      அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      துர்கா சரணம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நீங்கள் இன்று பகிர்ந்த இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சீர்காழி அவர்களின் பாடல்கள் அனைத்துமே மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்தப்பாடலை அவர் மனதை மயக்கும் வண்ணம் அருமையாக பாடியிருப்பார். எப்போதும் ரசித்து கேட்பேன். நானும் மனனமாக நவராத்திரி சமயங்களில், அடிக்கடி வீட்டில் பாடி மகிழ்வேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும்
      அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      எல்லாம் அவள் செயல்.,
      துர்கா சரணம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..