ஞாயிறு, செப்டம்பர் 07, 2025

விழிப்பு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
ஞாயிற்றுக்கிழமை

இன்று 
நம்ம ஸ்ரீராம் அவர்களது பதிவு

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!..


சென்னையைச் சேர்ந்த, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் செந்தில் மணிகண்டன்: 

"இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் வழியாக, உடல் உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பப்படும். இந்த ரத்த ஓட்டம் இதயத்துக்கு வரும் போது, ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது, வேறு ஒரு வேகத்திலும் செல்லும். 

இப்படிச் செல்லக்கூடிய, இந்த வேகத்துக்குப் பெயர் தான், ரத்த அழுத்தம்.  பொதுவாக, ரத்த அழுத்தத்தை, 120/80 என்ற அளவில் குறிப்பிடும்போது, இதில், 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் - இதயத்தை சுருங்கி ரத்தத்தை வெளியில் தள்ளும்போது, ஏற்படும் அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் - இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பின், தன் அளவில் விரிந்து உள்ளே வரும் ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, ஏற்படும் அழுத்தம்.


ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதில், சிறுநீரகம், அட்ரினல் சுரப்பி, மூளை மற்றும் நரம்பு மண்டலம், முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தொடர் சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். 

இது சிலருக்கு தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கக்கூடும்.

ஒருவருக்கு, 100/70 முதல், 140/90 வரை உள்ள ரத்த அழுத்தத்தை, 'நார்மல்' என, உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. 140/90க்கு மேல் அதிகரித்தால், அது உயர் ரத்த அழுத்தம் - ஹை பிரஷர் 90/60க்கு குறைவாக இருந்தால், அது குறைந்த ரத்த அழுத்தம் - லோ பிரஷர்.

ரத்த அழுத்தம் வராமல் இருக்க, தினமும், 30 முதல், 45 நிமிடம் நடைப்பயிற்சி, சமச்சீர் உணவு, தினமும், 6 - 9 மணி நேரத் துாக்கம் அவசியம். மன அழுத்தம் தவிர்க்க வேண்டும். புகை, மதுப்பழக்கம் கூடவே கூடாது.
மேலும், 30 வயதுக்கு மேற்பட்டோர், குடும்பப் பின்னணியில், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 30 - 50 வயதுடையவர்களில் தான், 90 சதவீதம் பேருக்கு, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பதால், அவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த, மருந்து, மாத்திரை, சிகிச்சைகள் வந்து விட்டன என்றாலும், வரும்முன் காப்பதும், நோய் கண்டபின் தொடர் பரிசோதனைகள், சிகிச்சைகளில் தவறாது இருப்பதும் மிக அவசியம்.

(தினமலர்  2013
- சொல்கிறார்கள் - )

 நன்றி
ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் Fb

நலங்கொண்டு
வாழ்வோம்

ஓம் சிவாய நம ஓம்
**

8 கருத்துகள்:

  1. நன்றி. சிறப்பு. விழிப்புடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்.

    நல்ல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. துரை அண்ணா, ரத்த அழுத்தத்திற்கு உணவு முறை, மருந்து எல்லாமும் உதவினாலும், முக்கியமாக மனம் அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் பதற்றம் இல்லாமல் அமைதியாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் சொல்லப்படுகிறது.

    நல்ல பதிவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக
      கருத்தும் மகிழ்ச்சி

      நன்றி சகோ

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..