நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 23
திங்கட்கிழமை
இன்று
இரண்டாம் படை வீடாகிய திருச்செந்தூர் திருக்குடமுழுக்கு
சேல் பட்டழிந்தது செந்தூர்
வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார்
மனம் மா மயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல்
அயன் கையெழுத்தே.. 40
-: கந்தரலங்காரம் :-
முருகனருள்
எங்கும் நிறையட்டும்
ஓம் சிவாய நம ஓம்
**
திருச்செந்தூர குடமுழுக்கு என்று நானும் செய்தித்தாளில் படித்தேன். இன்னும் திருச்செந்தூர் பார்த்ததே இல்லை தெரியுமா? என்னவோ போங்க...!!!
பதிலளிநீக்குவருந்த வேண்டாம்..
நீக்குவடிவேலன் வழி காட்டுவான்...
திருச்செந்தூரில் போர்புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம்...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நேற்றைய டீ.வி செய்தியில் அறிந்தோம்.
பதிலளிநீக்குதிருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.
அனைவர் நலனையும் அவனருள் காக்கட்டும்.
முருகா.. முருகா..
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருச்செந்தூர் குடமுழக்கு பற்றி அறிந்தேன். அவன் திருவடிப் பற்றி அவனருளை நாடுவோம். கந்தன் அனைவருக்கும் தன் கருணையை தப்பாது காட்டுவான். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..! வீர வேல் முருகனுக்கு அரோகரா.! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
நீக்குதங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா