வெள்ளி, ஏப்ரல் 12, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 30
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திருக்கழுக்குன்றம்

தான தத்த தான தத்த தான தத்த ... தனதான
தான தத்த தான தத்த தான தத்த ... தனதான


வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ... மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ... முடிதோய

ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ... புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ... புகல்வாயே..

காது முக்ர வீர பத்ர காளி வெட்க ... மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ... யிமையோரை

ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ... முனிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும் (வள்ளியின்) தினைப் புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகனே

வெட்சி மாலை அணிந்தவனே
வேடர் குலக்கொடி வள்ளியின் பாதத் தாமரையின் மீது  உனது திருமுடி படும்படி காதலித்து ஆட்கொண்டவனே
பன்னிரு தோள்களை உடையவனே..

ஆர்வங்கொண்டு நான் உனை அன்பின் வழிபாடு செய்யும்படிக்கு நல்ல புத்தியைச் சொல்லி அருள்வாயாக.

கோபத்துடன் வெகுண்டு வந்த வீர பத்ரகாளியானவள்
நாணும்படி கிரீடத்தை வானில்  வீசி தாண்டவம் ஆடியவரும் பக்தியுள்ள தேவர்களுக்கு (வேதத்தை) கற்பித்தவருமாகிய ஈசன் உன்னிடம் வேதம் கேட்கவும்
சிவபெருமானால் ஓதுவிக்கப்பட்ட பிரமன்
வெட்கமடையவும்

ஓரெழுத்தாகிய  ஓங்காரப்
பிரணவத்தில் ஆறெழுத்தாகிய 
சரவணபவ எனும் மந்திரம் 
அடங்கியுள்ள தன்மையை விளக்கி 
அருளிய பெருமாளே..
 

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. முருகா... முருகா.. ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. திருக்கழுக்குன்றம் முருகா போற்றி.
    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..