ஞாயிறு, ஜூலை 10, 2022

ஆஷாட நவராத்திரி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி மாத அமாவாசையைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா தொடங்கி ஒவ்வொரு நாளும் அபிஷேக அலங்கார ஆராதனைகள் சிறப்புடன் நிகழ்ந்து வெள்ளிக் கிழமை (8/7) அன்று மாலை அம்மன் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. விழா நிகழ்வுகளை கண்டு இன்புறும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வில்லை.. 

தஞ்சை ஞானசேகரன் அவர்கள் அம்மனின் அலங்கார தரிசனத்தைப் பகிர்ந்து இருந்தார்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி.. 

அவர் வழங்கிய படங்களை இன்றைய பதிவில் மகிழ்வுடன் வழங்குகின்றேன்..













இதன் கீழுள்ள படங்களை வழங்கிய தஞ்சை விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..











ஓம்
குண்டலிபுர வாசினி
சண்ட முண்ட விநாசினி
பண்டிதஸ்ய மனோன்மணி
வாராஹி நமோஸ்துதே
அஷ்ட லக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்ட தாரித்திரிய நாசினி
இஷ்டகாம ப்ரதாயிணி
வாராஹி நமோஸ்துதே

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

15 கருத்துகள்:

  1. வராஹி அம்மனைப் பணிந்து வணங்குவோம்.  படங்கள் யாவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வாராஹியின் அலங்காரங்கள் குறித்தும் ஆஷாட நவராத்திரி குறித்தும் தினமலரிலும் படிச்சேன். வருஷா வருஷம் அலங்காரங்களின் படங்கள் நெய்வேலி தீக்ஷிதர் அனுப்புவார். இந்த வருஷம் வரலைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிக தகவலுக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      நீக்கு
  3. இன்னைக்கு ஆஷாட ஏகாதசி. பண்டரிபுரத்தில் அமர்க்களப்படும்.

    பதிலளிநீக்கு
  4. தரிசனம் நன்று ஜி

    உத்திரகோசமங்கையிலும் ஸ்ரீவராஹி அம்மன் கோயில் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      உத்தரகோசமங்கையிலும் வராஹி அம்மன் கோயில் இருப்பது புதிய தகவல்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  5. வராஹி அம்மன் அலங்கார காட்சிகள் சிறப்பாக இருக்கிறது தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. வராஹி அம்மன் அலங்காரம் மிக அருமை.
    தரிசனம் செய்து கொண்டேன்.
    அனைத்து அலங்கார காட்சிகளும் மிக அருமையாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. வராஹி அம்மன் அலங்காரப் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. வணங்கிக் கொண்டேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..