நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 23, 2019

மார்கழி தரிசனம் 07

தமிழமுதம்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி ஒழுகப் படும்.. (154) 
***
அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 07


கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ சாரநாதப்பெருமாள் - திருச்சேறை 
தொழுது மலர்க்கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழுவாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை.. (2139)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
* * *

சிவ தரிசனம்
திருக்குடமூக்கு - கும்பகோணம் 


துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றும்மின் பித்தராய்
மறவனய்ப் பார்த்தன் மேற்கணை தொட்ட எம்
குறவனார் உறையுங் குடமூக்கிலே.. (5/22)
-: திருநாவுக்கரசர்:-
* * *



ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 07

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளுமாறு அதுகேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்
ஸ்ரீ துர்காம்பிகை - பட்டீஸ்வரம் 
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும்பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெலா, நின்னருட் புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே!..(027)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

13 கருத்துகள்:

  1. "குயில் பாடும் கும்பகோணம் கும்பகோணம் கோவில் கண்டேன்...   கும்பேஸ்வரப்பெருமானின் வடிவம் கண்டேன்...   அமுதக்குடம் உடைந்ததினால் அமைந்த லிங்கம்..."

    டி எம் எஸ் பாடல் நினைவுக்கு வருகிறது!

    https://www.youtube.com/watch?v=JF38gngNY7E 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்களுக்கு நல்வரவு...

      1980 களில் வந்த இசைத் தொகுப்பு அது... என்னிடம் இருக்கிறது ஒலிநாடாவாக....

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. பக்தி அமுதம் ரசித்தேன், ருசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பக்தி அமுதம். திகட்டாத அமுதம். பட்டீஸ்வரம் துர்கை மனதிலேயே நிற்கிறாள். எப்போவோ பத்து வருஷங்கள் முன்னர் போனது! கும்பேஸ்வரர் கோயிலும் போய்ப் பல வருடங்கள்!

    பதிலளிநீக்கு
  4. திகட்டா அமுதம்.
    பாடல்களும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அதிகாலைத் தமிழ் அமுதம் மனதுக்கு விளக்கம்.
    இனிமை கொடுக்க வந்த மார்கழிக்கு
    இயைந்த வணக்கம்.
    பக்தி பெருக இங்கே பதியப் பட்ட
    பாடல்கள்
    என்றும் ஊட்டும் நன்மை.நன்றி மா.

    பதிலளிநீக்கு
  6. மார்கழி ஏழாம்நாள் தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  7. அருமை. பாடல் வரிகள் அற்புதம்.
    காசும் பிறப்பும் கைகலப்ப கைபேர்த்து
    வாச நறுங்குழல் ஆய்ச்சியார் மத்தினால் ஓசை படுத் தயிர் அரவம் கேட்டிலையோ.
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..