வெள்ளி, டிசம்பர் 18, 2015

மார்கழித் தென்றல் - 02

குறளமுதம்

கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்..
***

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 02


திவ்ய தேசம் - திருஅனந்தபுரம்

எம்பெருமான் - ஸ்ரீ அனந்த பத்மநாபன்
தாயார் - ஸ்ரீஹரிலக்ஷ்மி

சிவலிங்கத்தை ஸ்பரிசித்தவாறு 
சயனத் திருக்கோலம்

ஸ்ரீ ஹேமகூட விமானம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்..

மங்களாசாசனம்
நம்மாழ்வார்.

ஆதியில் நிவேதனத்துடன் தேங்காய் ஓட்டில் ஊறுகாயும்
சமர்ப்பிக்கப் பெற்ற திருத்தலம்..
- - - 

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் 
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் 
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
***

சிவ தரிசனம்

திருத்தலம் - திருக்குற்றாலம்



இறைவன் -  அருள்திரு குற்றாலநாதர்
அம்பிகை - ஸ்ரீ சிவகாமவல்லி
தீர்த்தம் - ஐந்தருவி
தலவிருட்சம் -  ஆல்

பஞ்ச சபைகளுள் சித்ர சபை எனத் திகழ்வது..

சக்தி பீடங்களுள் பராசக்தி பீடம் என விளங்குகின்றது.

பாடிப்பரவியோர்
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயவே!.. (4/11)


ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
இரண்டாம் திருப்பாடல்

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(03 - 04)

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!..

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் க்னியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில்துயிலேலோர் எம்பாவாய்!..
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

12 கருத்துகள்:

  1. ,,,,,,,,செய்யாதென செய்யோம்,,,,,,

    நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்,

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மார்கழித் திங்களின் இரண்டாம் நிகழ்வு அருமை ஜி தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அபுதாபியில் குளிர் அதிகம் என நினைக்கின்றேன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருப்பாவை, திருவெம்பாவை கண்டோம், கேட்டோம். மார்கழியில் உங்களோடு தொடர்ந்து வருவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  4. நல்ல பகிர்வு ஐயா...
    மார்கழித் திங்கள் மனமகிழ்ச்சியைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  6. பாசுரங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு விஷயங்களை பொதிந்து வைத்திருக்கின்றன. படிக்க படிக்க மகிழ்ச்சி . நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திருப்பாவையும் திருவெம்பாவையும் பொக்கிஷங்கள்..
      முற்றாக ஆய்ந்தறிய ஆயுள் போதாது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..