சனி, நவம்பர் 14, 2026

வாழ்க வாழ்க..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
சனிக்கிழமை

கந்த சஷ்டி ஐந்தாம் நாள்


சஷ்டி கவசத்திலிருந்து சில வரிகள்

உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள் செய்...

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
***

2 கருத்துகள்:

  1. கந்த சஷ்டி ஐந்தாம் நாள் விழாவுக்கு வந்துவிட்டோம்.

    கந்தா குமரா கதிரேசா என....பல நாமங்களில் அவன் பாதம் தொழுது நிற்கிறோம். அனைவர் நலனையும் அவனருள் காக்க பணிவோம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..