நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
இன்று
ஞானசம்பந்தர் தேவாரம்
தலம்
பிரமபுரம் - சீர்காழி
எம்பிரான் எனக்கமுதம்
ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும்
தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த
காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
புரத்துறையும் வானவனே.. 2/40/1
எமக்குத் தலைவன் ஆகிய சிவபெருமான் அமுதமாகத் திகழ்பவன், தன்னை அடைபவர்களை விட்டுப் பிரியாதவன், கரத்தினில் தழல் ஏந்தியவன், பெரிய யானையை உரித்துப் போர்த்த நீலகண்டன் கபாலியானவன்..
இத்தகையோன் நறுமணம் மிக்க பொழில்கள் சூழ்ந்த பிரமபுரத்தில் வானவர் தலைவனாக உறைகின்றனன்...
ஓம் நம சிவாய
***


வானவர் தலைவனை வணங்கியே பணிவோம். ஓம் நமச்சிவாய.
பதிலளிநீக்குஓம் நம சிவாய..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
சீர்காழி பதிகத்தை பாடி பிரமபுர வானவர் தலைவனை வணங்கி கொண்டேன்.படங்கள் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
பிரமபுரத்து இறைவனை வணங்கி நிற்கிறோம்.
பதிலளிநீக்குஅனைவர் நலனையும் காக்க வேண்டுகிறோம்.
ஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா