நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 2
புதன் கிழமை
சில தினங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு ஊர்க் கோயிலில் காளியம்மனின் திருமுகத்தை வராஹியைப் போல
மாற்றி அலங்கரித்து அதையும் ஒளிப்படம் எடுத்து ஊடகங்களில் பதிவு செய்து பேசு பொருளானது..
இந்நிலையில் இந்த விஷயம் தொடர்பாக ஈழத்தில் இருந்து கிடைத்திருக்கும் அரிய தகவல்கள் - இன்றைய பதிவில்..
அகோரசிவம்
உமையரசு
அவர்களது பதிவு..
நன்றி Fb
மூர்த்திகளை அலங்காரம் பண்ணல்.
ஆன்மாக்களது கன்மத்திற்குத் தக்கவாறு பஞ்ச கிருத்தியத்தைச் செய்தருளும் இறைவன் பல மூர்த்தங்களாகத் தோன்றி, அவர்களுக்குப் போக, மோக்ஷங்களைக் கொடுத்தருளுகின்றனர்.
அம்மூர்த்தங்களுள் சில சயனிப்பனவும், சில நடப்பனவும், சில நிற்பனவும், சில இருப்பனவுமாக உள்ளன.
அன்பர்கள் பூசை பண்ணும்போது அம்மூர்த்திகள் சுகாசனமாக இருந்து கொண்டே அப்பூசையை ஏற்கும்.
அம்மூர்த்திகளை ஆலயங்களில் ஆகம முறைப்படி பிரதிட்டை செய்து பூசித்து வருவது தொன்றுதொட்டுள்ள வழக்கமும் விதியுமாம். அம்மூர்த்திகளை முறை தவறாது அலங்கரித்து வழிபடுவது மிக மேலாகிய புண்ணியமாகும்.
நிற்பனவாகிய மூர்த்திகளை நின்ற ரூபமாகவும், இருப்பனவாகிய மூர்த்திகளை அந்த ரூபமாகவும், சயன மூர்த்தியை அந்த ஆகிருதியாகவும் அலங்கரித்து வணங்குதல் வேண்டும். மாறிச் செய்யிற் குற்றமாம்.
மூர்த்தியின் திருமேனியில் கட்டுதல், மரக்கட்டை உலோகம் முதலியவற்றாற் செய்யப்பட்ட கை கால்கள் வைத்து - கபடமாக அலங்கரித்தல், லீலாபேதமானவோர் விக்கிரகத்தைப் பிறிதொரு லீலாமூர்த்தியாக அலங்கரித்தல், சிவதேகத்தில் விஷ்ணுரூபத்தைக் கற்பித்தல், சந்திரசேகரத் திருமேனியில் நிருத்த ரூபத்தையும், கல்யாண சுந்தாரிடத்தில் நிருத்த ரூபத்தையும் அலங்கரித்தல், உக்கிர மூர்த்தியைச் சாந்த ரூபமாகவும், சாந்த மூர்த்தியை உக்கிர ரூபமாகவும் அலங்கரித்தல், திருவாசியில்லாதபடி அலங்கரித்தல் முதலிய விபரீத அலங்காரங்கள் செய்யப்படின் விபரீத பலனும் உண்டாம். ஆயுள் குன்றும்; பிரபுக்கள் அரசர் யஜமானர்கள் அங்கஹீனமாவார்கள். அத்தோஷம் நீங்கும் பொருட்டுப் பிராயச்சித்தம் செய்து கொள்க.
அவ்வத்தேவர்களுக்குரிய வஸ்திரம், யோக்கியமானதும் வாசனைபொருந்தியதுமான புஷ்பமாலை உத்தமமான ஆபரணங்கள் ஆகிய இவைகளால் அலங்கரிக்கத்தக்கது என்று காமிகம் வீரதந்திரம் முதலிய ஆகமங்கள் கூறுகின்றன.
ஆலய அதிகாரிகள் ஆகம சாஸ்திர ஆராய்ச்சியுள்ள சிவாசாரியர்களுடன் கலந்து அக்கிரமமான செயல்களை அகற்றிச் சற்கருமங்களைக் கைக்கொண்டு ஒழுகுவது உத்தமமாகும்.
அச்சுவேலி குமாரசுவாமி குருக்கள் எழுதிய மகோற்சவ விளக்கம் எனும் நூலிலிருந்து.
--------*****----------*****---
இவை நிற்க
இறை திருமேனிகளை அலங்காரம் செய்கின்றவர்கள் தீக்கையுடையவராயிருந்து ஆன்மார்த்த சிவபூசை உடையவராயிருத்தல் வேண்டும்.
இறைவனை மெய் தீண்டி பூசை செய்வதற்கு மட்டுமல்லாமல் இறைவனை அலங்கரிக்கின்ற அலங்காரனாச்சாரியர்களுக்கும் தகுதிப்பாடுகள் அவசியமாகும்.
பலர் அவ்வாறில்லாமல் சைவ ஒழுக்கமும் சமய அறிவுமின்றி வாய்நிறைய வெற்றிலையும் புகையிலையுமாய் இறை திருவுருவங்களை பயபத்தியில்லாமல் சாதாரண ஒப்பனைக் கலைஞராக (Makeup artist) மட்டும் செயற்படுவது மனவருந்தத்தக்கது.
திருச்சிற்றம்பலம்
***

ஆமாம். உண்மையில் சமீப காலங்களில் அப்படிதான் ஆகிவிட்டிருக்கிறது. அது பொழுதுபோக்கு அம்சமாகவும், காசு பார்க்கும் இடமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி ஒருமித்த குரலில் பேசுவோர் இல்லை என்பதைவிட பேசுவோரே இல்லை என்றே சொல்லலாம்.
பதிலளிநீக்கு/// ஒருமித்த குரலில் பேசுவோர் இல்லை என்பதைவிட பேசுவோரே இல்லை என்றே சொல்லலாம். ///
நீக்குஉண்மை உண்மை..
அன்பின் வருகைக்கு நன்றி. ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பதிவில் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியை பல மலர், அலங்காரங்களுடன் தரிசிப்பதில் பெரும் மகிழ்வு கொள்கிறோம். ஆனால், அந்த மூர்த்தியை வேறு விதமாக மாற்றியமைத்து அலங்காரம் செய்வதில் உள்ள தீமைகளை பற்றி பதிவில் தெரிந்து கொண்டேன். அப்போதைக்கு அவ்வாறு அலங்கரிப்பவரை சிலாகித்து பாராட்டினாலும், அதன் விளைவுகள் கடினமானதே .! பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முன்னோர்கள் அமைத்துத் தந்தவற்றை முறையாக பராமரித்தலே புண்ணியம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நன்றியம்மா
இன்றைய பகிர்வு ஆகம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகிறது.
பதிலளிநீக்குஆகம சாஸ்திரங்களை கைக்கொண்டு அலங்காரங்கள் செய்வது நன்மையைத் தரும்.
உண்மை... உண்மை
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நன்றியம்மா
இறைவனை முறைபடி வணங்குதல் நல்லதுதான்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா