செவ்வாய், ஜூலை 14, 2026

அப்பன் நீ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 செவ்வாய்க்கிழமை


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
    ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
    துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
    இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
***

12 கருத்துகள்:

  1. எமக்கு எல்லாம் நீயே என்று ஒரு வார்த்தையில் சொல்லாமல் அழகாய் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறார்!

    ஓம் நமச் சிவாய.

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வாண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

      மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எபியில் அறிந்து கொண்டேன். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களுக்கு இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

    திருநாவுகரசரின் தேவாரம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன். இறைவனிடம் முழுமையாக சரணடைந்து விடுவதென்பது இதுதான். பாடல் வரிகளை பாடும் போது இறைவனை நினைத்து கண்ணீர் மல்குகிறது.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு
  4. மிக அருமையான தேவாரப் பாடல். இறைவனை அம்மையப்பனாக வணங்கும் தர்மம் நம்முடையது

    பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  5. சிறப்பான தேவாரப் பாடல்..... நன்றி.

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..... நல்லதே நடக்கட்டும். நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    உங்களுக்கு அப்பன் அருள் என்றும் கிடைக்கும் நலமே வாழுங்கள்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..