நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி
வெள்ளிக்கிழமை
இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்
தீர்த்தனைச் சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முத
லாய ஒருவனைப்
பார்த்த னுக்கு அருள்
செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி
யேன் மறந்து உய்வனோ.. 5/2/2
பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயவனை சிவபெருமானை சிவலோகனை ஞான உருவினனை உலகத் தோற்றத்திற்கு முன்
மூலமாய் நின்றவனை பார்த்தனுக்கு வேடனாய்த் தோன்றி பாசுபதம் ஈந்து அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனைக் கொடியேனாகிய நான் மறந்து உய்வடைவேனோ ? ..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***

வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? பதிவு அருமை. இன்றைய பதிவில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரப்பாடலை பாடி, பொருளை உணர்ந்து கொண்டேன். இறைவனை தொழுது வழிபட்டும் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தர வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொண்டேன் 🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
"தீர்த்தனை சிவனை சிவலோகனை....." கரம் கூப்பி வணங்குவோம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
ஓம் நமச் சிவாய.... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
நீக்குமகிழ்ச்சி.. நன்றி