வெள்ளி, ஜூன் 19, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வெள்ளிக்கிழமை


சுந்தரர் தேவாரம்

தலம்
திருக்கடவூர்

அன்றா லின்னிழற்கீழ்
  அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர்
  கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா
  கடவூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான்
  எனக்கார் துணை நீயலதே.. 7/28/3

மான் கன்று விளையாடும் திருக்கரத்தினை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ  - அன்று ஆல நிழலின் கீழ் இருந்து முனிவர் நால்வர்க்கு அருள் செய்து , காலனை வீழ்த்தி  மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்தாய்.. இத்தன்மை உடைய உன்னையல்லாது வேறு துணை யார் எனக்கு ?...

நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

9 கருத்துகள்:

  1. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இன்றைய நம் பேசுதமிழில் நாம் கவிதைகள் என்று எழுதுகிறோம். அந்தக் கால பாடல்களை படிக்கும்போது ஓரளவு மக்கள் இதே வழக்கில்தான் பேசி இருப்பார்களோ என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது கல்வி அறிவு, தாகம் இருந்தவர்கள் மாத்திரம் செய்யுளை ரசித்திருப்பார்கள். அப்போது உரைநடை இல்லையல்லவா?

      நீக்கு
  2. சுந்தரர் பாடல் பாடி வீரட்டான இறைவனை வணங்கிக் கொணைடோம்.

    பாடல் கருத்துடன் தந்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிகத்தை அர்த்தத்துடன் எழுதியிருப்பது சிறப்பு

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..