வெள்ளி, மார்ச் 20, 2026

சிட்டுக்குருவி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை




இன்று
உலக சிட்டுக்குருவி தினம்

சிட்டுக்குருவிகளை
அனைத்துக் கவிஞர்களும்  
பாடி வைத்துள்ளனர்...

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச்
சிட்டுக் குருவியைப் போல...

- என்பது மகாகவியின் வாக்கு...

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து 
சேர்ந்திடக் கண்டேனே..
செவ்வானம் கடலினிலே 
கலந்திடக் கண்டேனே...
என்றார் கவியரசு...

சிட்டுக் குருவிகள் இன்று நம்மிடையே பரவலாக இல்லை... காரணிகள் பற்பல.. கால சூழ்நிலை இது...

சிட்டுக் குருவிகளை நினைவு  கூர்வோம்..
***
இன்று எமது திருமண நாள்...

ஆயுள் ஆரோக்கிய 
நலங்களுக்கு இறைவன் 
துணை இருப்பானாக...

நலம் வாழ்க..
***

24 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதலில் உங்களின் திருமணநாளுக்கு என மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல தேகபலம், மனபலம் நிறைந்த ஆரோக்கியமான நல்வாழ்வை இறைவன் தர வேண்டுமாய் இன்றைய நாளில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சிட்டுக்குருவிகள் பற்றிய பதிவை ரசித்து வாசித்தேன். அழகான சின்னஞ்சிறு பறவை. இப்பறவைகள் இப்போது நம்மிடையே காணாமல் போனதற்கு நாம்தான் முக்கிய காரணம். நம் விஞ்ஞான வளர்ச்சிகள் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் போய் விட்டது என்ற செய்திகள் வேதனையைதான் தருகிறது. மீண்டும் அவைகளின் வரையும் எதிர்பார்த்தபடி அதன் நினைவை என்றும் மறவாது இருப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " அவைகளின் வரவையும்"என்பது "வரையும்" என தட்டச்சு தவறாக்கி விட்டது. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. நெகிழ்ச்சியான கருத்து...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா.

      நீக்கு
  2. உங்கள் திருமண நாளுக்கு வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு. இன்று என் மகனுக்கும் திருமண நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      இன்று திருமணநாளை கொண்டாடும் உங்கள் மகனுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக பல்லாண்டுகள் வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...

      தங்களது மகனுக்க மருமகளுக்கும் நல்வாழ்த்துகள்..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    3. ஸ்ரீராம், உங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்!

      நீக்கு
  3. சிட்டுக்குருவியை லேகியம் செய்தே ஒழித்து விட்டார்கள்!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவிக்கும் லேகியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை

      நீக்கு
  4. 'விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போல' என்று படித்ததும் மனம் அதை SPB குரலில்தான் ராகத்துடன் படித்தது.  

    தரையில் இறங்கும் விமானங்கள் என்று இந்துமதியின் நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது.  அதில் SPB குரலில் நிறைய சின்னச் சின்ன பாரதியார் பாடல் வரிகள் வரும்.  அவைகளை பொதுவில் வெளியிடலாம்.  ஆனால் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.  இந்துமதி FaceBook ல்  இருப்பதால் அவரிடம் தனியாக மெசஞ்சரில் சென்று கூட கேட்டேன்.  இவர்கள் எல்லாம் எப்போது நம்மை மதித்திருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இவர்கள் எல்லாம் எப்போது நம்மை மதித்திருக்கிறார்கள்!..///

      தெரிந்து கொண்டால் சரி...

      நீக்கு
  5. முதல் படம் பார்த்ததும் இன்னொரு குருவி வந்து விட்டாலே ஒன்றுக்கொன்று முறைத்துக் கொண்டு முகம் திருப்பிதான் நிற்கும்போல என்று சும்மா மனதில் தோன்றியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவற்றுக்குள்ளும் ஊடல் பிணக்குகள் எல்லாமும் உண்டு...

      நீக்கு
  6. இனிய திருமணநாள் வாழ்த்துகள். இறையருளால் நலமே வாழ்க.

    சிட்டுக் குருவிகள் பகிர்வு படங்களுடன் அருமை.

    பகிர்வு படித்ததும் ஓர் மகிழ்ச்சியான செய்தி இக் கட்டான நகரவாழ்க்கையில் வாழும் சிட்டுக்குருவிகள் எங்கள் வீட்டுக்கு தினமும் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்லும் என்பதுதான்.

    அவர்களும் வாழ வழி செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்களுடன் கூடி வாழ்ந்த குருவி இனம்.. விலகிப் போனது காலக் கொடுமை....

      அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...
      நன்றியம்மா..

      நீக்கு
  7. இனிய திருமண நாள் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்
    சிட்டுக்குருவி படங்களும் பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...
      நன்றியம்மா..

      நீக்கு
  8. ஆயுள் ஆரோக்கியத்தை இறைவன் அருள்வார்.

    பதிலளிநீக்கு
  9. இப்போதுதான் சிட்டுக் குருவி பற்றி கோமதி அக்கா பதிவில் படித்து, கருத்திட்டுவிட்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
  10. இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி...

      நன்றியம்மா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..