திங்கள், பிப்ரவரி 16, 2026

கதம்ப இட்லி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை

கதம்ப இட்லி


தேவையான பொருள்கள் :-
வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு

பாசிப்பயறு 200 கி
கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயம், முட்டைக் கோஸ் இலைகள், பூண்டு, இஞ்சி அனைத்துமாக 200 அல்லது 250 கி

மல்லித் தழை சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

ஒருநாள் முன்னதாக பச்சைப் பயறை ஊற வைத்து முளை கட்டி வைக்கவும்..

வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு தயாராக இருக்கட்டும்..

முளை கட்டி வைத்திருக்கின்ற பச்சைப்  பயறை மிக்ஸியில் இட்டு சுழற்றி எடுத்து -  இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்..

கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் இலைகள், சின்ன வெங்காயம், 
பூண்டு இஞ்சி இவற்றையும்
மல்லித் தழை கறிவேப்பிலை இலைகளையும்  மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

இவை அனைத்தும் 250 கிராமிற்கு மிகாமல் இருப்பது நல்லது ....


இவற்றையும் இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து தேவை எனில் உப்பு சேர்த்து  இட்லித் தட்டில்   ஊற்றி பக்குவமாக அவித்தெடுத்து 
வற மிளகாய் இல்லாத தக்காளிச் சட்னி தேங்காய் சட்னி இவற்றுடன் பரிமாறவும்.

இலை மற்றும் காய் கிழங்குடன் அவிக்கப்பட்ட  உணவாதலால் இது உடலுக்கு மிகவும் இதமானது.. 

பச்சைப் பயறை தோலுடன் அரைத்திருப்பதால் கூடுதலாக நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***

10 கருத்துகள்:

  1. வித்தியாசமான ருசியான இட்லி. மி.பொடியுடன் சூப்பராக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    சுவையான குறிப்பு - சத்தானதும் கூட. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமை.  பயறு சேர்க்காமல் காய்கள் கலந்து செய்திருக்கிறேன்.  அதேபோல பீட்ரூட் மிக்சியில் அரைத்துச் சேர்த்து சிவப்பாக இட்லி செய்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கை பக்குவம் தான் அறிந்ததாயிற்றே....

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. சத்தான இட்லி செய்முறை.

    முளைகட்டிய பயறு சேர்த்து செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கதம்ப இட்லி நன்றாக இருக்கிறது.
    சத்தான இட்லி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..