ஞாயிறு, பிப்ரவரி 15, 2026

சிவராத்திரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மாசி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று மகா சிவராத்திரி


தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே..2/50
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :-


பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடு இருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே..7/29
-: ஸ்ரீ சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :-


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே..
-: ஸ்ரீ பட்டினத்தடிகள் :-

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    சிவராத்திரி வாழ்த்துகள். இன்றைய பதிவு அருமை. நால்வர் பாடிய பாடல்களைப் பாடி இறைவனை சிரந்தாழ்த்தி வணங்கிக் கொண்டேன்.

    /அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
    அன்புடைய மாமனும் மாமியும் நீ
    ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ /

    ஆம். அனைத்துமானவனும் நீ. என்னுயிரும் நீ.
    உயிரை சுமக்கும் உடலும் நீ. ஒப்பற்ற உன்னை வணங்கும் அருளை என்றும் தப்பாது தருபவனும் நீ.
    இறைவா.. ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
  3. பதிகங்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    மகா சிவராத்திரி பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  4. இந் நன்னாளில் சிவ தரிசனம் பெற்றோம். நன்றி.

    அனைவருக்கும் சிவராத்திரி வாழ்த்துகள்.

    பாடல்கள்பாடி வணங்கினோம்.
    அனைவரையும் சிவனருள் காக்கட்டும்.
    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  5. சிவராத்திரி நன்னாளில் பாசுரங்கள் அனைத்தையும் படித்து மகிழ்ந்தேன். இப்போதான் துரை செல்வராஜு சாரின் ஒருஜினல் பதிவைப் படித்த திருப்தி.

    விண்ணிடைக் குருகாவூர் வெள்ளிடை நீயன்றே பாசுரத்தில் குருகாவூர் என்பது பிழையோ என்று நினைத்தேன். குருகாவூர் வெள்ளிடை என்ற தலத்தைக் குறிக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. ஓம் நமச்சிவாய.... நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..