வெள்ளி, ஜனவரி 16, 2026

ஆநிரை வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை இரண்டாம் நாள் 
மாட்டுப் பொங்கல் 

 நன்றி
வெங்கடேஷ் ஆறுமுகம்

ஆநிரை வாழ்க






பட்டி எங்கும் பெருகட்டும்
பால் பசுவும் வாழட்டும்..
நிலம் எல்லாம் செழிக்கட்டும்
நெற்கட்டும் நிறையட்டும்..
பவளமணி குவியட்டும்
பால் சோறு பொங்கட்டும்..

மங்கலமாய்த் திசை எட்டும்
மங்கை மனம் வாழட்டும்..
தங்க வளை பேசட்டும்
தர்மங்கள் சூழட்டும்
தன்னுயிராய் மன்னுயிரைத் 
தாங்குபவர் வாழட்டும்..

படுபிணியும் கொடுவினையும் 
பாதையோடு போகட்டும்..
பாதகமும் பாழ்குணமும்
பாதையின்றித் தொலையட்டும்!..
தமிழமுதம் பொங்கட்டும்
தமிழகமும் வாழட்டும்!..
**
2023 ல்
பதிவிடப் பெற்ற கவிதை


அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**

8 கருத்துகள்:

  1. பாடல் ரசித்தேன்.  மாட்டுப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவோம்.  எங்கள் வீட்டில் கணுவுக்கு சகோதரி வருவார் கணுச்சீர் வாங்க!

    பதிலளிநீக்கு
  2. மாட்டுபொங்கல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    கவிதை அருமை.படங்கள் எல்லாம் அருமை.
    ஆநிரை வாழ்க ! வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
      வாழ்க வையகம்

      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஆநிரை வாழ்த்துகள். எங்கள் வீட்டின் அருகே உள்ள மேலூரில் இன்றைய தினம் நிறைய கொண்டாட்டங்கள் இருக்கும். வீட்டு வழியே அவர்கள் வீட்டு ஆநிரைகளை அலங்கரித்து அழைத்துச் செல்வார்கள் - பார்த்ததுண்டு.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்..

      மேல் விவரங்கள் அருமை...
      மகிழ்ச்சி.
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. பட்டிப் பொங்கல் வாழ்த்துகள்.

    கவிதை நன்று. படங்களும் பிடித்திருந்தன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..