செவ்வாய், ஜனவரி 13, 2026

மார்கழி 29

  


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 29

குறளமுதம்

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.. 399

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.. 29
*
ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த 
திருவெம்பாவை


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.. 19

 சுந்தரர்  அருளிச் செய்த 
தேவாரம்

திரு வலம்புரம்
மேலப்பெரும்பள்ளம்

எனக்கினித் தினைத்தனைப்
  புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும்
  பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க்
  கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன
  திடம்வலம் புரமே.  7/72/1
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் ஹரி ஓம்
நம  சிவாய
***

9 கருத்துகள்:

  1. மார்கழி 29 ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. திருப்பாவைக்கு இன்று இணைத்துள்ள படம் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  3. சேர்க்கை சரியில்லை என்று குற்றம் கூறும் வழியின்றி, வாச்சவன் சரியில்லை அதனால் வாழ்க்கை போனது  என்று வாய்நோக அரற்றும் முன், நட்போ, உறவோ  எனக்கு வாய்ப்பவனையே உன் புகழ் பாடுபவர்களாகக் கொடு என்று வேண்டிக் கேட்டுப் பெறுவது சிறப்பு இல்லையா?  சுந்தரமாக எழுதி இருக்கிறார் சுந்தரர்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. திருப்பாவை பாசுரமும் அருமை. நாராயணரின் அழகான பாதகமலங்களை தினமும் வணங்கி மகிழ்வோம்.

    திருவெம்பாவை, தேவார பாடல்களை படித்து மகிழ்வெய்தினேன். இறைவன் அனைவரையும் பாரபட்சமின்றி காத்தருள வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாராயணரின் பாதக் கமலங்களை வணங்கி மகிழ்வோம்..

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  5. நாராயணன் பாதம் சரணம்.

    அழகிய படங்கள்.

    ஓம் சிவாயநமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..