சனி, ஜனவரி 03, 2026

மார்கழி 19

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

மார்கழி 19
இன்று திரு ஆதிரை

சித்ரசபை - திருநெல்வேலி

வேத நாயகன்
  வேதியர் நாயகன் 
மாதின் நாயகன்
  மாதவர் நாயகன் 
ஆதி நாயகன்
  ஆதிரை நாயகன் 
பூத நாயகன்
  புண்ணிய மூர்த்தியே.  5/100/1
- திருநாவுக்கரசர் -

குறளமுதம்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்..19

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.. 19
**

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.. 9

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

திரு புள்ளிருக்கு வேளூர்
வைத்தீஸ்வரன் கோயில் 


பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.. 6/54/3
*
நன்றி
பன்னிரு திருமுறை
**

ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..