திங்கள், மே 05, 2025

திங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 22
திங்கட்கிழமை

காலிஃப்ளவர் பனீர் கூட்டு 
 

காலிஃப்ளவர் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு உரியது..

காலிஃப்ளவரை பனீருடன் சேர்த்து எளிய செயல்முறையில் குறிப்பு இது..

தேவையானவை :


காலிஃப்ளவர் 250 gr
பனீர் துண்டுகள் 150 gr
தேங்காய் ஒருமூடி
பல்லாரி  வெங்காயம் ஒன்று
புதினாவும்
மல்லித் தழையும் சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 2 Tsp
மஞ்சள் தூள் Tsp 
மிளகுத் தூள் 1 Tsp
ஓமம் Tsp
முந்திரி 10
கல் உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :

கடலெண்ணெய் தேவைக்கு
கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு - தங்கள் வழக்கப்படி
கறிவேப்பிலை ஒரு இணுக்கு 

செய்முறை :


காலிஃப்ளவர் வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து நன்றாக
அலசிக் கொள்ளவும்..

காலிஃப்ளவரை தனித் தனியாகப் பிரித்து ஆவியில் வேக வைக்கவும்.

தேங்காயைத் துருவி மிளகு ஓமத்துடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்..

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்  கொள்ளவும்..

இருப்புச் சட்டியில்
எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பனீர், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும்.

அவித்து எடுத்த காலிஃப்ளவரை இதனுடன் போட்டு மஞ்சள் தூள், உப்புத் தூள் சேர்த்து காலிஃப்ளவர் உடைந்து விடாதபடி மெதுவாகக் கிளறி விடவும்.

வாணலியில்
 எண்ணெய் விட்டு முந்திரிப் பருப்புகளை சிவக்க வறுக்கவும்.

காலிஃப்ளவருடன் 
 வறுத்த முந்திரி, தேங்காய் விழுது மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  அடுப்பை நிறுத்தி காலிஃப்ளவரை மூடி
வைக்கவும்.. 

இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்..

இதையே பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து மசாலா
குழம்பாகவும் வைக்கலாம்..

கூட்டு ஓரளவுக்கு தளர்வாக இருப்பது - அவசியம்..

சற்று இறுக்கமாக தயாரித்தால் -
Veg., பிரியாணி போன்றவற்றுக்கு துணையாக அமையும்..
**
ஓம் அன்னபூர்ணாயை நம: 

8 கருத்துகள்:

  1. காலிஃபிளவரில் இதுவரை இது மாதிரி செய்ததில்லை. வீட்டில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது காலிஃப்ளவர் கிடைக்கின்றது...

      செய்து பாருங்கள்

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. குழம்பும் முயற்சித்ததில்லை.  ஒன்று தக்காளிக்கு வெங்காயம் வதக்கி கறி.  இலலாவிட்டால் 65.  இப்படிதான் செய்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. வித்தியாசமான கூட்டு செய்முறை . செய்து பார்க்கிறேன்.

    காலிப்ளவர் மஞ்சூரியன் செய்வேன். பன்னீர் சேர்த்து செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை செய்து பாருங்கள்

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காலிஃப்ளவர் கூட்டு செய்முறை, படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இந்த முறையில் பனீர் சேர்த்து செய்ததில்லை. ஒரு தடவை இப்படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை செய்து பாருங்கள்

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..