நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின் அமாவாசை..
திருவள்ளுவப் பெருமான் குறித்தருளும்
தென் புலத்தாருக்கான
வழிபாட்டுக்குரிய நாள்..
இந்நாளில் தான்
அடியவரின் பொருட்டு
திருக்கடவூரில்
அற்புதம் ஒன்றினை
நிகழ்த்தியருளினாள்
அம்பிகை..
முழு நிலவின் ஒளி
உலகிற்கு அழகூட்டுகின்றது..
முழு நிலவினைக் கண்ட மனம்
துயர்களின்று நீங்கி
அமைதியடைகின்றது..
அமைதியையும் ஆனந்தத்தையும்
அருளுகின்ற முழு நிலவாக
அபிராமவல்லி பிரகாசிக்கின்றாள்..
அவளது திருவடிகளில்
தலை வைத்து வணங்கி
அமைதியையும் ஆனந்தத்தையும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
வேண்டிக் கொள்வோம்..
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத இளமையும் குன்றாத வளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி
அபிராமியே!..
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடையில்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் வந்து என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!..
-: அபிராமி பட்டர் :-
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ