நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 01, 2016

நவராத்திரி 1

இன்று மங்கலகரமான நவராத்திரி வைபவத்தின் முதல் நாள்..

முதல் மூன்று நாட்களும் 
சர்வலோக சரண்யை ஆகிய அம்பிகைக்கு உரியன..

பல்வேறு சிறப்புகளுக்கு உரியது - நவராத்திரி வைபவம்

யாதாகினும் - பெண்மை வென்ற பெருமையே போற்றுதற்குரியது..

இந்த நவராத்திரி வைபவத்தின் மூலம் - 
ஒவ்வொரு பெண்ணும் தன்னை உணர வேண்டும்!.. 

அதுவே கொண்டாட்டக் குதுகலத்தின் பயனாகும்..

அந்த சிறப்பினை அன்னை பராசக்தி யாவருக்கும் அருள்வாளாக!..


ஓம்சக்தி சக்திசக்தி என்று சொல்லு - கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு
சக்திசக்தி சக்தி என்று சொல்லி - அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு..

ஓம்சக்தி மிசைபாடல் பலபாடு - ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு..
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு..


ஓம்சக்தி செய்யும் புதுமைகள் பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு..
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு..

ஓம்சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்
சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை..
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை..


ஓம்சக்தி சக்திசக்தி என்று நாட்டு - சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு..
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
சாதிகளெல்லா லாமதனைக் கேட்டு..

ஓம்சக்தி சக்திசக்தி என்றுமுழங்கு - அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு..
சக்தியருள் கூடிவிடு மாயின் - உயிர்
சந்ததமும் வாழும் நல்லகிழங்கு..


ஓம்சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு..
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருள் என்றே மனதுதேறு..

ஓம்சக்தி துணை என்றுநம்பி வாழ்த்து - சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து..
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய் - சிவ
சக்தியருள் வாழ்க என்று வாழ்த்து..
-: மகாவி பாரதியார் :-


சர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே..

ஓம் சக்தி ஓம்..
***

9 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    நவராத்திரி விழா தொடக்கம் நன்று வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    ஓம் சக்தி ஓம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அம்பிகையின் அருள் அனைவருக்குமாகட்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நவராத்திரி விழா முதல் நாள் அம்மனின் அணிவகுப்பு பகிர்வு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நவராத்ரி விஷா மிகச் சிறப்புடன் துவங்கியிருக்கிறது உங்கள் தளத்திலும்.... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..