நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 21, 2015

மார்கழித் தென்றல் - 05

குறளமுதம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை..
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 05


இன்று வைகுண்ட ஏகாதசி
பூலோக வைகுந்த தரிசனம்

திவ்ய தேசம் - திருஅரங்கம்



எம்பெருமான் - ஸ்ரீரங்கநாதன்
உற்சவர் - நம்பெருமாள்



தாயார் - ஸ்ரீரங்கநாயகி

ஸ்ரீ ப்ரணவாக்ருதி விமானம்
சயனத் திருக்கோலம்
தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்

மங்களாசாசனம்
மதுரகவி ஆழ்வாரைத் தவிர
மற்றுள்ள பதினோரு ஆழ்வார்களும் பாடிப் பரவிய திருத்தலம்..



இங்குதான்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
அரங்கநாதனுடன் கலந்து இன்புற்றனள்..
***


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் 
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம் 
திருத்தலம் - திருஆனைக்கா


இறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - நாவல்



அம்பிகை தவமிருந்து 
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்.

பஞ்சபூதத் திருத்தலங்களுள் 
நீரின் அம்சமாகத் திகழ்வது..

கருவறையினுள் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிலும் 
நீர் சுரந்து கொண்டிருக்கின்றது..

பாடிப்பரவியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
* * *

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்த
தேவாரம்


பொய்யேதும் இல்லாத மெய்யன் தன்னைப்
புண்ணியனை நண்ணாதார் புரநீறாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை
ஏறமரும் பெருமானை இடமானேந்து
கையானைக் கங்காள வேடத்தானைக்
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருஆனைக் காவுளானைச்
செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே!..(6/63)
* * *


ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
ஐந்தாம் திருப்பாடல்

பூதங்கள் தோறும்நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(09 - 10)

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெரியோனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே என்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்!..

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்!..
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

11 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. திருப்பாவை, திருவெம்பாவை படித்தேன். திருவரங்கம், திருவானைக்கா சென்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. மார்க்ழி தென்றலாய் வீசட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திருப்பாவையும், திருவெம்பாவையும் பதிவுகளில் அழகாக மிளிர்கிறது. படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மார்கழியின் ஐந்தாம்நாள் திருவெம்பாவை நன்றி ஜி தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..