பச்சைப் பட்டு விரித்தாற் போல - கண்ணுக்கு எட்டிய தூரம் வரை - பசுமை!..
செழுமை என்ற சொல்லுக்கு - சிறந்த முதல் உதாரணம்!..
இந்த இடம் இப்படி இருப்பதற்கு - யார், எது - காரணம் என்றெல்லாம் யோசிக்காமல், இதுவே - நமக்கு ஏற்ற நல்ல இடம் எனத் தீர்மானித்தார்கள் - அவர்கள்.
அவர்கள்!.. -
தஞ்சகன், தாண்டகன் மற்றும் தாரகன். மூவரும் சகோதரர்கள்.
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் - ஆடு மாடுகளை மேய்ப்பதும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதும் தான்!..
இவர்கள் வந்து தங்கிய இடத்தின் பெயர் பராசரக்ஷேத்திரம் என்பதையும். பராசர முனிவரின் வேண்டுதலின் பேரில் மஹாவிஷ்ணு விண்ணிலிருந்து இறக்கித் தந்தருளிய விண்ணாற்றின் வற்றாத நீர் ஆதாரத்தினால் தான் அந்தப் பகுதி வளம் கொஞ்சுகின்றது என்பதையும் அவர்கள் அறிந்தார்களில்லை.
ஆனால் மகரிஷியாகிய பராசரர் - அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். ஆயினும், அவர்களால் பெரிதாக இன்னல் ஏதும் விளைவதற்கு யாதொரு காரணமும் இல்லையென - பெருந்தன்மையாக இருந்து விட்டார். ஆனால் - அதற்கு அப்புறம் தான் தொடங்கியது வினை!..
தஞ்சகனின் வளர்ப்பு பசுக்களில் ஒன்று நாளும் மறைவாக எங்கோ சென்று வருவதை உணர்ந்து கொண்ட அவன் - அன்று அந்தப் பசுவைத் தொடர்ந்தான். அது பரபரப்புடன் சென்று - அடர்ந்து வளர்ந்திருந்த வன்னி மரத்தின் கீழ் நின்றது.
அங்கே சுயம்புவாக சிவலிங்கம்!.. அப்புறம் என்ன!.. பசு தன்னிச்சையாய் சிவலிங்கத்தின் மீது - பாலைப் பொழிந்தது. இதனைக் கண்ட தஞ்சகனின் மனதில் அன்பும் ஆதுரமும் மேலிட்டது.
''..ஒரு விலங்குக்கு உள்ள உள்ளுணர்வு கூட நமக்கு ஏற்படவில்லையே!.. இத்தனை நாள் பிழை செய்து விட்டோமே!..'' - என்று வருந்தி - தானும் தன் தம்பியருடன் சிவ வழிபாடு செய்து தவம் மேற்கொண்டான்.
அப்படி அவன் செய்த தவத்திற்கு மனம் இறங்கினார் - சிவபெருமான். சிவதரிசனம் பெற்ற தஞ்சகன் - பெருமானிடம் மாறாத அன்பு வைத்திருக்கும் படியான வரத்தினைக் கேட்டான். ஈசனும் அவ்வாறே வழங்கி மேலும் பல வளங்களையும் அருளினார்.
நேசனாக வளர்ந்தவன் - வரங்கள் பல பெற்ற பின் நீசனாக ஆனான்.
அங்கிருந்த முனிவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்னல்கள் அவனால் விளைந்தது. மனதிலிருந்து அன்பு அகன்று ஆணவம் குடி கொண்டது. தவமுனிவர்களுக்கு உதவுதற்கு வந்த தேவர்களையும் எதிர்த்து வீழ்த்தினான்.
வானவர் தலைவனை வளைக்க முயன்றான். தேவ அஸ்திரங்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. அஞ்சி நடுங்கிய தேவர்கள் பரமேஸ்வரனைச் சரணடைந்தார்கள் - ''..தஞ்சம் என்று!..''

ஆணவத்தில் சிகரத்தில் நின்று அடாது செய்யும் தஞ்சகனைக் கண்டு உள்ளம் கொதித்தாள் - சர்வேஸ்வரி!.. கோபம் கொதித்து - செந்தணலாகக் கொப்பளிக்க - காளி என எழுந்தாள்.
அவளுடைய உக்ரத்தைக் கண்டு - தேவர்கள் மேலும் பதற்றமாகினர். எல்லாம் வல்ல எம்பெருமான் நிகழ இருப்பதை அறிந்தவராக - தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் பொருட்டு, பூத நாயகனாகிய ஹரிஹரசுதனை அழைத்தார்.
தஞ்சம் என அடைக்கலம் ஆன தேவர்களைக் காக்கும் பொறுப்பினை ஹரிஹர சுதனிடம் ஒப்படைத்தார். தர்மசாஸ்தாவாகிய ஹரிஹரசுதனும் தேவர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் - சிறை - வைத்து காத்தருளினார். ''ஸ்ரீசிறைகாத்த ஐயனார்'' - எனத் திருப்பெயர் பெற்றார்.
மூண்டது போர்.
எட்டுத் திக்கிலும் தீவண்ணங் கொண்டு சுற்றிச் சுழன்றாள் - ஸ்ரீ காளி. அசுர குணம் கொண்டு அடாத செயல்களைப் புரிந்த தாண்டகனும் தாரகனும் சாம்பலாகி வீழ்ந்தனர்.
தஞ்சகன் மட்டும் தான் அறிந்த மாய வேலைகளை - மகாமாயை ஆகிய பராசக்தியிடம் காட்டியவனாக களத்தில் நின்று ஆடிக் கொண்டிருந்தான். அவனது அறியாமையை எண்ணிச் சிரித்த அம்பிகை - சீறிச் சினந்தபோது - அவளிடமிருந்து கோடி கோடி என தீப்பிழம்புகள் திக்கெட்டும் பரவி நின்றன.
அதைக்கண்டு அண்டபகிரண்டமும் நடுநடுங்கியது. தஞ்சகன் புத்தி பேதலித்தவனாக தடுமாறிக் கீழே விழுந்தான். காரணம் -
கோடி கோடி என வெளிப்பட்ட பிழம்புகள் அத்தனையிலும் அன்னையின் உக்ர முகம் விளங்கியது தான்!..
கீழே விழுந்தவன் மீது, திருவடியைப் பதித்து திரிசூலத்தினை ஊன்றினாள்!..
அந்த விநாடியில் அம்பிகையின் இதயக் கமலத்திலிருந்த சிவபெருமான் - பெருங் கருணையுடன் - அன்னையின் சஹஸ்ர கமலத்தில் திருமுகங்காட்டி, ''..ஹே கெளரி!..'' - என அழைத்தருளினார்.
அந்த அளவில் அம்பிகை - சாந்தம் அடைந்தாள். கோடி முகம் காட்டியதால் ஸ்ரீகோடியம்மன் எனும் திருப்பெயர் அமைந்தது.
''தாயே!.. தகாதன செய்து கடையனான நான் - நின் திருவடி தீட்சையால் கடைத்தேறினேன். ஆயினும், என்னுள் ஒரு விருப்பம். என் ஆணவத்தினை அழிக்க - நீ எழுந்தருளிய இத்திருத்தலம் அகிலம் உள்ள அளவும் என் பெயரால் விளங்க வேண்டும்!. நீயும் இங்கேயே இருந்தருளி - உன்னை வணங்குபவரின் ஆணவத்தை அழித்து அருள வேண்டும்!..''. - என வேண்டிக் கொண்டான்.
தஞ்சகன் செய்த சிவபூஜையின் புண்ணியம் அவனைக் காத்தது. பிரச்னை நீங்கிய அளவில் தஞ்சகனின் விருப்பப்படியே அருளினர்.
அப்படி வழங்கப்பட்ட திருத்தலம் -
தஞ்சாவூர்!..
தமக்குத் தஞ்சம் அளித்த - சிவபெருமானை ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் எனப் போற்றி வணங்கிய தேவர்கள் - உக்ரம் தணிந்து நின்ற அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தம்மைப் பாதுகாத்த அம்பிகைக்கு தமது அன்பினை - ஆனந்தத்தை சமர்ப்பித்தனர். தானாகி நின்ற தற்பரை - தேவர்கள் அளித்த ஆனந்தத்தை அவர்களுக்கே வழங்கி -
தாயாக அருள் சுரந்து நின்றாள்.
ஸ்ரீஆனந்தவல்லி - எனும் திருநாமம் கொண்டாள்.
இந்தத் திருத்தலத்தில் தான் - வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து - தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும் புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம்.
மாதந்தோறும் இங்கே - அமாவாசையன்று - கட ஸ்தாபனம் செய்து குபேர யாகத்துடன், அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது. அதிலும் குபேரனின் தவம் பலித்த ஐப்பசி அமாவாசையன்று மிகச் சிறப்பாக இந்த வைபவம் நிகழ்கின்றது.
இந்த மங்களகரமான - வைபவத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் கவலைகள் தீர்கின்றன. கண்ணீர் சுவடுகள் மறைகின்றன.. கடன்கள் தீரவும் தனதான்ய விருத்தி ஏற்படவும் வேண்டுவார் வேண்டும் வண்ணம் - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் அருள்கின்றார்.
தஞ்சம் என்று தவித்து வருவோர் தம் வாட்டம் தீர்த்து - ''அஞ்சேல்!..'' என்று ஆனந்தத்தை அளிக்கின்றாள் அன்னை - ஸ்ரீ ஆனந்தவல்லி!..
தனது கோபத்தில் விளைந்த கோடியம்மனை நோக்கியவளாக ஸ்ரீஆனந்த வல்லி அருள் பாலிக்கின்றாள்.
கிழக்கு பிரகாரத்தில் - தெற்கு நோக்கிய வன்னியடி விநாயகர் வரப்ரசாதி!..
குபேரனும் மஹாலக்ஷ்மியும் குறைகளைத் தீர்த்து அருள்கின்றனர். நாடி வருவோர் நலம் பெறுவதை கண்கூடாகக் காணலாம்!..
தஞ்சை மாநகரில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. வன்னி மரம் தலவிருட்சம். வெண்ணாறு தீர்த்தம்.
வெண்ணாற்றின் தென் கரையில் உள்ள ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு எதிர்புறம் - ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வைணவத்தில் இந்த சம்பவம் சற்றே மாறுதலாக இருக்கும்.
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கிய திருக்கோயில் என்பது மிகச்சிறப்பான விஷயம்!..
பஞ்சம் தீர்க்கும் பஞ்ச க்ஷேத்திரங்களுள் - முதலாவது திருக்கோயில்!.. தவிரவும் தஞ்சை மாநகரின் ஈசான்ய மூலையில் திகழும் சிறப்பினையும் உடையது!.. மூர்த்தி தலம் தீர்த்தம் - என்ற சிறப்புடைய திருக்கோயில்..
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, ஐயம் பேட்டை செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் திருக்கோயிலின் அருகில் நின்று செல்கின்றன.
தன்னுடைய செல்வங்களை இராவணனிடம் இழந்ததும் பல தலங்களிலும் இறைவழிபாடு செய்த - குபேரன், தன் குறை நீங்கப்பெற்ற திருத்தலம்.
இந்தத் திருத்தலத்தினைப் பற்றி இன்னும் பல தகவல்கள் உள்ளன.
தீபாவளி அன்று மாலையில் வெகு சிறப்பாக குபேர வழிபாடு நிகழும். குறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் சந்நிதிக்கு வாருங்கள். வந்து சிவதரிசனம் செய்யுங்கள்!..
- என்ற ஸ்லோகத்தினால், ஸ்ரீகுபேரனை சிந்தித்து வணங்குங்கள்.
தஞ்சம் என அடைக்கலம் ஆன தேவர்களைக் காக்கும் பொறுப்பினை ஹரிஹர சுதனிடம் ஒப்படைத்தார். தர்மசாஸ்தாவாகிய ஹரிஹரசுதனும் தேவர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் - சிறை - வைத்து காத்தருளினார். ''ஸ்ரீசிறைகாத்த ஐயனார்'' - எனத் திருப்பெயர் பெற்றார்.
மூண்டது போர்.
எட்டுத் திக்கிலும் தீவண்ணங் கொண்டு சுற்றிச் சுழன்றாள் - ஸ்ரீ காளி. அசுர குணம் கொண்டு அடாத செயல்களைப் புரிந்த தாண்டகனும் தாரகனும் சாம்பலாகி வீழ்ந்தனர்.
தஞ்சகன் மட்டும் தான் அறிந்த மாய வேலைகளை - மகாமாயை ஆகிய பராசக்தியிடம் காட்டியவனாக களத்தில் நின்று ஆடிக் கொண்டிருந்தான். அவனது அறியாமையை எண்ணிச் சிரித்த அம்பிகை - சீறிச் சினந்தபோது - அவளிடமிருந்து கோடி கோடி என தீப்பிழம்புகள் திக்கெட்டும் பரவி நின்றன.
அதைக்கண்டு அண்டபகிரண்டமும் நடுநடுங்கியது. தஞ்சகன் புத்தி பேதலித்தவனாக தடுமாறிக் கீழே விழுந்தான். காரணம் -
கோடி கோடி என வெளிப்பட்ட பிழம்புகள் அத்தனையிலும் அன்னையின் உக்ர முகம் விளங்கியது தான்!..
கீழே விழுந்தவன் மீது, திருவடியைப் பதித்து திரிசூலத்தினை ஊன்றினாள்!..
அந்த விநாடியில் அம்பிகையின் இதயக் கமலத்திலிருந்த சிவபெருமான் - பெருங் கருணையுடன் - அன்னையின் சஹஸ்ர கமலத்தில் திருமுகங்காட்டி, ''..ஹே கெளரி!..'' - என அழைத்தருளினார்.
ஸ்ரீகோடியம்மன் |
''தாயே!.. தகாதன செய்து கடையனான நான் - நின் திருவடி தீட்சையால் கடைத்தேறினேன். ஆயினும், என்னுள் ஒரு விருப்பம். என் ஆணவத்தினை அழிக்க - நீ எழுந்தருளிய இத்திருத்தலம் அகிலம் உள்ள அளவும் என் பெயரால் விளங்க வேண்டும்!. நீயும் இங்கேயே இருந்தருளி - உன்னை வணங்குபவரின் ஆணவத்தை அழித்து அருள வேண்டும்!..''. - என வேண்டிக் கொண்டான்.
தஞ்சகன் செய்த சிவபூஜையின் புண்ணியம் அவனைக் காத்தது. பிரச்னை நீங்கிய அளவில் தஞ்சகனின் விருப்பப்படியே அருளினர்.
அப்படி வழங்கப்பட்ட திருத்தலம் -
தஞ்சாவூர்!..
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் |
தாயாக அருள் சுரந்து நின்றாள்.
ஸ்ரீஆனந்தவல்லி - எனும் திருநாமம் கொண்டாள்.
ஸ்ரீமஹாலக்ஷ்மி - குபேரன் |
மாதந்தோறும் இங்கே - அமாவாசையன்று - கட ஸ்தாபனம் செய்து குபேர யாகத்துடன், அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது. அதிலும் குபேரனின் தவம் பலித்த ஐப்பசி அமாவாசையன்று மிகச் சிறப்பாக இந்த வைபவம் நிகழ்கின்றது.
இந்த மங்களகரமான - வைபவத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் கவலைகள் தீர்கின்றன. கண்ணீர் சுவடுகள் மறைகின்றன.. கடன்கள் தீரவும் தனதான்ய விருத்தி ஏற்படவும் வேண்டுவார் வேண்டும் வண்ணம் - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் அருள்கின்றார்.
தஞ்சம் என்று தவித்து வருவோர் தம் வாட்டம் தீர்த்து - ''அஞ்சேல்!..'' என்று ஆனந்தத்தை அளிக்கின்றாள் அன்னை - ஸ்ரீ ஆனந்தவல்லி!..
தனது கோபத்தில் விளைந்த கோடியம்மனை நோக்கியவளாக ஸ்ரீஆனந்த வல்லி அருள் பாலிக்கின்றாள்.
கிழக்கு பிரகாரத்தில் - தெற்கு நோக்கிய வன்னியடி விநாயகர் வரப்ரசாதி!..
குபேரனும் மஹாலக்ஷ்மியும் குறைகளைத் தீர்த்து அருள்கின்றனர். நாடி வருவோர் நலம் பெறுவதை கண்கூடாகக் காணலாம்!..
தஞ்சை மாநகரில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. வன்னி மரம் தலவிருட்சம். வெண்ணாறு தீர்த்தம்.
வெண்ணாற்றின் தென் கரையில் உள்ள ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு எதிர்புறம் - ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வைணவத்தில் இந்த சம்பவம் சற்றே மாறுதலாக இருக்கும்.
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கிய திருக்கோயில் என்பது மிகச்சிறப்பான விஷயம்!..
பஞ்சம் தீர்க்கும் பஞ்ச க்ஷேத்திரங்களுள் - முதலாவது திருக்கோயில்!.. தவிரவும் தஞ்சை மாநகரின் ஈசான்ய மூலையில் திகழும் சிறப்பினையும் உடையது!.. மூர்த்தி தலம் தீர்த்தம் - என்ற சிறப்புடைய திருக்கோயில்..
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, ஐயம் பேட்டை செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் திருக்கோயிலின் அருகில் நின்று செல்கின்றன.
தன்னுடைய செல்வங்களை இராவணனிடம் இழந்ததும் பல தலங்களிலும் இறைவழிபாடு செய்த - குபேரன், தன் குறை நீங்கப்பெற்ற திருத்தலம்.
இந்தத் திருத்தலத்தினைப் பற்றி இன்னும் பல தகவல்கள் உள்ளன.
தீபாவளி அன்று மாலையில் வெகு சிறப்பாக குபேர வழிபாடு நிகழும். குறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் சந்நிதிக்கு வாருங்கள். வந்து சிவதரிசனம் செய்யுங்கள்!..
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய
தன தான்யாதி பதயே
தன தான்யாதி பதயே
தனதான்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா
தேஹி தாபய ஸ்வாஹா
- என்ற ஸ்லோகத்தினால், ஸ்ரீகுபேரனை சிந்தித்து வணங்குங்கள்.
வந்த குறையும் - குறையும்!..
வருகின்ற குறையும் - மறையும்!..
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருவடிகள் போற்றி! போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..